ராம்குமார் - விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இணையும் ‘ராட்சசன் 2’?

By செய்திப்பிரிவு

இயக்குநர் ராம்குமாரும், விஷ்ணு விஷாலும் 'ராட்சசன் 2' படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'முண்டாசுப்பட்டி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ராம்குமார். அந்தப் படத்தைத்தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் அவர் இயக்கிய 'ராட்சசன்' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் ராம்குமாரின் முந்தைய இரண்டு படங்களுமே ஹிட்டானது.

இதனால் அவரது அடுத்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக, தனது மூன்றாவது படத்தில் தனுஷுடன் கைகோக்க ராம்குமார் திட்டமிட்டிருந்தததாகவும், அது தொடர்பான ப்ரிபுரொடக்‌ஷன் வேலைகள் இரண்டாண்டுகள் நடைபெற்று வந்த நிலையில், தனுஷ் இந்தப் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது தான் இயக்கும் மூன்றாவது படத்தில் நாயகனாக விஷ்ணு விஷாலை நடிக்க வைக்க ராம்குமார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் உறுதிசெய்யப்படும் நிலையில், மூன்றாவது முறையாக விஷ்ணு விஷால் - ராம்குமார் கூட்டணி இணைய உள்ளது. மேலும், இந்தப் படம் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

விஷ்ணு விஷாலை பொறுத்தவரை அவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 'எஃப்ஐஆர்' படம் வெளியானது. தற்போது கௌதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குநராக இருந்த மனுஆனந்த் இயக்கத்தில் 'மோகன்தாஸ்' படத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்