பிரபல வங்க மொழி திரைப்பட இயக்குநர் தருண் மஜும்தார் காலமானார். அவருக்கு வயது 92. நான்கு முறை தேசிய விருதுகளை இவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கையை அழுத்தமான கதையம்சங்கள் மூலம் திரையில் கொண்டு வந்தவர் வங்க மொழி திரைப்பட இயக்குநர் தருண் மஜூம்தார். 'பலிகா பது', 'குஹேலி', 'ஸ்ரீமர் பிருத்விராஜ்', 'தாதர் கீர்த்தி' உள்ளிட்ட முக்கியமான பல படங்களை இயக்கியுள்ளார். நான்கு முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ள அவர், 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன் முதுமை காரணமாக திடீரென உடல் நலம் குன்றியது. சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்ட அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவரது உடல்நிலை மோசமடைந்தததை அடுத்து தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்று இன்று காலை உயிரிழந்தார். வங்க மொழித் திரைப்படத்துறையில் முக்கியமான இயக்குநரான அவரது இழப்புக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
» இப்படியொரு திரைப்படம் கொடுத்தற்காக மாதவனுக்கு நன்றிகள் - ரஜினி பாராட்டு
» விக்ரம் வேதா படத்திற்கு ஹ்ரித்திக் கெடுபிடி: வதந்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி
'கஞ்சர் ஸ்வர்கா' (1962), 'பாலடக்' (1963), 'குஹேலி' (1971), ஸ்ரீமான் பிருத்விராஜ் (1972), 'பாலிகா பாது' (1976), 'தகினி' (1974), 'கணதேவதா' (1978), தாதர் கீர்த்தி (1980), 'பலோபாசா பலோபாசா' (1986) உள்ளிட்டவை அவரது இயக்கத்தில் வெளியான குறிப்பிடத்தகுந்த படைப்புகள்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago