அருண் விஜய் நடிக்கும் 'தமிழ் ராக்கர்ஸ்' வெப்சீரிஸ் 

By செய்திப்பிரிவு

அருண் விஜய் நடிக்கும் 'தமிழ் ராக்கர்ஸ்' இணைய தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் இணைய தொடர் 'தமிழ் ராக்கர்ஸ்'. இந்தத் தொடரில் நடிகை வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அறிவழகன் இயக்கும் இந்தத் தொடரை, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனத்துடன் சோனிலிவ் நிறுவனம் இணைந்து இந்த வெப்சீரிஸை தயாரித்துள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் தொடர் பைரஸி சைபர் க்ரைமுக்கு பின்னால் இருக்கும் இருள் பக்கங்களை காட்சிப்படுத்தும் ஒரு க்ரைம் தொடராக இது உருவாகியுள்ளது. இந்தத் தொடர் குறித்து ஏவிஎம் புரடக்சன்ஸ் தயாரிப்பாளர் அருணா குகன் கூறுகையில், ''தமிழ் ராக்கர்ஸ் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நெருக்கமான தொடராகும். ஏனெனில் எங்களின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளது.

மேலும் இந்த தொடர் மூலம் ஏவிஎம் புரொடக்சன்ஸ் முதல் முறையாக ஓடிடி தளத்தில் கால்பதிக்கிறது. சைபர் க்ரைம், பைரஸி பொழுதுபோக்குத் துறையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்களுக்கு காட்டவும், அதை பற்றிய கதையை கூறுவதிலும் மிகவும் ஆர்வமாக இருந்தோம். திறமை மிகுந்த இயக்குநர் அறிவழகனுடன் பணிபுரிந்ததால், இக்கதையை ஆழமாகவும், அபார திறமையுடனும் காட்சிப்படுத்த முடிந்துள்ளது. அருண் விஜய் இத்தொடரில் நடித்தது இத்தொடருக்கு மிகப்பெரும் பலத்தை தந்ததுள்ளது. சமீப காலங்களில் அதிகம் பேசப்படும் தொடர்களை, ரசிகர்கள் கொண்டாடும் படைப்புகளை அளித்து வரும் சோனிலிவ் தளத்தில் எங்களது 'தமிழ் ராக்கர்ஸ்' வெளியாவதை காண ஆவலோடு உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.

டீசர் இதோ :

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

31 mins ago

சினிமா

37 mins ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்