புது டெல்லி: தான் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென்.
தமிழில் கடந்த 1997-இல் வெளியான 'ரட்சகன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சுஷ்மிதா சென். அதிகளவில் இந்தி மொழி படங்களில் தான் இவர் நடித்துள்ளார். 1994-இல் பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டத்தை வென்றவர். இந்நிலையில், ட்விங்கிள் கண்ணா தொகுத்து வழங்கும் 'தி ஐகான்ஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் சுஷ்மிதா. அதில் தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதை அவர் விளக்கி இருந்தார்.
"அதிர்ஷ்டவசமாக எனது வாழ்வில் நான் சில சுவாரஸ்யமான ஆண்களை சந்தித்துள்ளேன். ஆனால், அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்தேன். அந்தக் காரணத்தால் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனது குழந்தைகளுக்கு இதில் துளியளவும் தொடர்பு இல்லை. என் வாழ்வில் இருந்த நபர்களை எனது குழந்தைகள் இருவரும் மனதார ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு மரியாதையும், அன்பையும் அளித்துள்ளனர். அதை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.
மூன்று முறை நான் திருமணம் செய்துகொள்ளும் சூழல் என் வாழ்வில் உருவானது. ஆனால், கடவுள் என்னை அதிலிருந்து காத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுடன் நான் சந்தித்த சிக்கல்களை என்னால் வெளியில் சொல்ல முடியாது. என்னையும், எனது குழந்தைகளையும் கடவுள் தான் காத்து வருகிறார்" என தெரிவித்துள்ளார் சுஷ்மிதா.
» IND vs ENG | கடந்த முறை பயிற்சியாளர்... இந்த முறை வர்ணனையாளர்... - ரவி சாஸ்திரியின் அவதாரம்
» IND vs ENG | அவுட் கொடுத்த நடுவர்... DRS ரிவ்யூவில் முடிவை மாற்றிய புஜாரா; ஆனால்…
46 வயதான அவர் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago