சென்னை: வரும் செப்டம்பர் 15-ம் தேதி அன்று நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் காம்போவில் உருவாகி உள்ள திரைப்படமான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த அறிவிப்பை மிகவும் வித்தியாசமாக டீசர் வடிவில் தெரிவித்துள்ளது படக்குழு. இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘காலத்திற்கும் நீ வேணும்’ பாடல் கவனம் ஈர்த்துள்ளது. பாடலாசிரியர் தாமரை அதற்கான வரிகளை எழுதி உள்ளார்.
சித்தி இத்னானி, ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆப்ரஹம் முதலானோர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படம் சிம்பு, கவுதம் வாசுதேவ் மேனன் காம்போவில் உருவாகி உள்ள மூன்றாவது திரைப்படம். இதற்கு முன்னதாக ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருந்தது.
» ரஜினி, கமல்... இன்றும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸை ஆளும் நாயகர்கள்!
» திரைப்படம் ஆகிறது மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி வாழ்க்கை வரலாறு!
இந்த நிலையில், இப்போது இந்தப் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோலிவுட் சினிமாவின் முன்னணி நாயகர்களின் திரைப்படங்கள் வரும் நாட்களில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago