புதுடெல்லி: மூன்று முறை இந்திய நாட்டின் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாயியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பயோபிக் திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பை படத்தை இணைந்து தயாரிக்க உள்ள வினோத் பானுஷாலி மற்றும் சந்தீப் சிங் வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் சுருக்கமாக ‘அடல்’ என அறியப்படுகிறது. வரும் 2023 கிறிஸ்துமஸ் நாளன்று இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. அன்றைய தினம் வாஜ்பாயின் 99-வது பிறந்த நாள். அதனை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.
The Untold Vajpayee: Politician and Paradox என்ற புத்தகத்தை தழுவி இந்தப் படத்தின் திரைக்கதை அமைய உள்ளது. இதில் அவரது பால்ய காலம், கல்லூரி நாட்கள் மற்றும் அரசியல் என்ட்ரி குறித்து விவரிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
பாஜகவின் முதல் பிரதமராக அரியணையில் அமர்ந்தவர் வாஜ்பாய். கடந்த 1924, டிசம்பர் 25-ஆம் தேதி அன்று பிறந்தவர். மத்தியப் பிரதேசத்தின் குவாலியரை சேர்ந்தவர். முதுகலை பட்டம் முடித்தவர். தான் சார்ந்த கட்சியின் கொள்கையை தீவிரமாக பின்பற்றி வந்தவர்.
பாஜகவின் முதல் தலைவர், மூன்று முறை பிரதமராக செயலாற்றியவர். பொக்ரான் - II அணுகுண்டு சோதனை மற்றும் கார்கில் யுத்தம் இவரது ஆட்சி காலத்தில் நடந்தது. கடந்த 2002-இல் முன்னாள் குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் தேர்வு செய்யப்பட்டதும் இவரது பதவி காலத்தில்தான். பாரத ரத்னா விருதை பெற்றவர். கடந்த 2018, ஆகஸ்ட் 16 அன்று அவர் காலமானார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
13 mins ago
சினிமா
21 mins ago
சினிமா
53 mins ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago