விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியை அனிமேஷன் வடிவில் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

By செய்திப்பிரிவு

சென்னை: தனது பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியை அனிமேஷன் வடிவில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். அவர் தனது 48-வது பிறந்தநாளை இந்த தருணத்தில் கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு அவரது ரசிகர்கள், திரை பிரபலங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. தளபதி என ரசிகர்களால் அவர் அன்போடு அழைக்கப்படுகிறார். தற்போது அவரது நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வழக்கமாக தனது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கருத்துள்ள வகையில் குட்டிக் கதையை நடிகர் விஜய் சொல்வது வழக்கம். அந்த வகையில் மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டின் போது நதியை உதாரணமாக வைத்து ஒரு குட்டிக் கதையை சொல்லியிருந்தார். தற்போது அதை அனிமேஷன் வடிவில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ.

‘நீ நதி போல ஓடிக்கொண்டு இரு’ என்ற பெயரில் இந்த அனிமேஷன் கதை வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 1.27 நிமிடங்கள் இந்த கதை அனிமேஷன் வடிவில் நதியாக பாய்கிறது. இறுதியில் விஜயின் ஆட்டோகிராஃப்புடன் அந்த கதை நிறைவடைகிறது. பின்னர் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறது. தனித்துவமான வகையில் வாழ்த்து தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்