பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் ‘பான் இந்தியா’ படத்தில் ராம் சரண் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் பர்ஹாத் சம்ஜி இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்கும் படம் 'கபி ஈத் கபி தீவாளி'. இந்தப்படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், பூஜா ஹெக்டே, ஜெஸ்சி கில் உட்பட பலர் நடிக்கின்றனர்.
தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு என பான் இந்தியாவாக உருவாகும் இப்படத்தில், தெலுங்கு நடிகர் ராம் சரண் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் சல்மான் கானுடன் ராம் சரண் நடனமாக இருக்கிறார்.
» பாலியல் வன்கொடுமை புகார்: ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் இயக்குநர் பால் ஹக்கிஸ் கைது
» ‘விஜய் 66’ படத்தின் தலைப்பு ‘வாரிசு’ - வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
அண்மையில் 'ஆர்ஆர்ஆர்'படத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் ராம்சரண் நடனமாடிய பாடல் ஹிட் அடித்தது. அதேபோன்ற மாஸான பாடல் ஒன்றில் சல்மான் கானும், ராம் சரணும் ஆட இருக்கின்றனர். இதற்காக ராம் சரணை, சல்மான் கான் அணுகியபோது, அவர் எந்தவித தயக்குமும் இல்லாமல் உடனே ஒப்புகொண்டதாக கூறப்படுகிறது. ராம் சரண் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
27 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago