‘வாடிவாசல்’ முடிந்த பின்பு விஜய்யிடம் கதை சொல்கிறார் வெற்றிமாறன்?

By செய்திப்பிரிவு

'வாடிவாசல்' படத்திற்குப் பிறகு நடிகர் விஜய்யிடம் இயக்குநர் வெற்றிமாறன் கதை ஒன்றை சொல்ல ஆயத்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

'பொல்லாதவன்' படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிய வெற்றிமாறன், 'ஆடுகளம்', 'விசாரணை', 'வடசென்னை', அசுரன்', உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களை கொடுத்தார். தற்போது நடிகர் சூரியை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கிவருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து, 'வாடிவாசல்' படத்தையும் இயக்குகிறார். ஜல்லிக்கட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்திற்கு சூர்யா முன்னதாக படத்திற்கான ஒரு சிறிய ஷெட்யூலை முடித்துள்ளார். மேலும் காளைகளிடம் பயிற்சியும் எடுத்து வருகிறார் சூர்யா. இதனிடையே 'இறைவன் மிகப்பெரியவன்' என்ற இணையத்தொடர் ஒன்றையும் எழுதிவருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய்க்காக கதை ஒன்றை தயார் வெற்றிமாறன் தயார் செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'வாடிவாசல்' படத்தை முடித்த பிறகு, இந்தக் கதையை விஜய்யிடம் சொல்ல முடிவெடுத்துள்ளாராம் வெற்றிமாறன்.

முன்னதாக 'மாஸ்டர்' படத்திற்கு முன்பே விஜய்யிடம் வெற்றிமாறன் கதை ஒன்றை கூறியதாகவும், பல்வேறு காரணங்களால் அது டிராப் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

விஜய்யை பொறுத்தவரை, அவர் தற்போது வம்சி இயக்கத்தில் 'விஜய் 66' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணைகிறார். இந்த காலக்கட்டத்தில் வெற்றிமாறன் 'வாடி வாசல்' படத்தை இயக்கி முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. எனவே, லோகேஷ் கனகராஜ் படத்திற்கு பிறகு, வெற்றிமாறன் கதையை நடிகர் விஜய் தேர்வு செய்யலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்