சீனுராமசாமி - ஜிவிபிரகாஷ் கூட்டணியில் ‘இடி முழக்கம்’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

ஜிவி பிரகாஷ்குமார் நடிக்கும் புதிய படமான 'இடி முழக்கம்' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம் 'இடி முழக்கம்'. 'மாமனிதன்' படத்திற்கு பிறகு சீனுராமசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.

'ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக காயத்ரி நடிக்கிறார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் உருவாகும் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

விரைவில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE