நியூயார்க்கில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ ட்ரெய்லர்

By செய்திப்பிரிவு

மாதவன் இயக்கி நடித்துள்ள ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ திரைப்படத்தின் ட்ரெய்லர், அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயர் டிஜிட்டல் விளம்பரப் பலகையில் திரையிடப்பட்டது.

இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு'. இந்தப் படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் இயக்கிய நிலையில், படத்திலிருந்து அவர் விலகினார். பின்னர், இந்தப் படத்தை நடிகர் மாதவனே இயக்கினார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக, 1994-ல் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் நம்பி நாராயணன் நிரபராதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்தும் கதையாக உருவாகியுள்ள படம், 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' என பெயரிடப்பட்டது. தமிழில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. நடிகர் மாதவன், நம்பி நாராயணனாக நடித்துள்ளார். சிம்ரன், பிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே , ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், ஜூலை 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே , உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் விளம்பர பலகையான, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் டைம்ஸ் ஸ்கொயரில் அமைந்துள்ள நாஸ்டாக் டிஜிட்டல் விளம்பர பலகையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஒளிப்பரப்பட்டது. இதை நடிகர் மாதவன், நம்பி நாராயணன் ஆகியோர் ரசிகர்களுடன் பார்த்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

மேலும்