‘கேஜிஎஃப்’ பட நிறுவனத்துடன் இணைந்து ‘பான் இந்தியா’ படம் இயக்கும் பிரித்விராஜ்

By செய்திப்பிரிவு

நடிகர் பிரித்விராஜ் ‘கேஜிஎஃப்’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து 'டைசன்' என்ற ‘பான் இந்தியா’ படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

'கனா கண்டேன்' 'மொழி' 'அபியும் நானும்' உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் மொழி ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் பிரித்விராஜ் . மலையாளத் திரையுலகில் நடிகராக இருந்த பிரித்விராஜ் , மோகன்லால், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான 'லூசிஃபர்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மோகன்லாலை வைத்து இரண்டாவது படமாக 'ப்ரோ டாடி' படத்தை இயக்கினார்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது. இதையடுத்து படங்களில் இயக்குநராக கவனம் செலுத்திவரும் அவர், 'எம்புரான்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்திற்கு பிறகு, 'டைசன்' என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு 'லூசிஃபர்' படத்தின் திரைக்கதையை எழுதிய முரளி கோபி எழுதியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆகிய மொழிகளில் பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்தை 'கே.ஜி.எஃப்' படங்களை பிரம்மாண்டமாகத் தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கிறது. த்ரில்லர் பாணியில் உருவாக உள்ள இப்படம் 2023-ம் ஆண்டு திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்