நடப்பாண்டில் வெளியான விஜய், அஜித் படங்களை வசூலில் முறியடித்து சாதனை படைத்துள்ளது கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது 'விக்ரம்' திரைப்படம்.
அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 'விக்ரம்' படம் வெளியான முதல் நாள் இந்தியாவில் மட்டும் ரூ.32 கோடியை வசூலித்தது; உலக அளவில் ரூ.48.68 கோடியை எட்டியது. பின்னர், படம் வெளியாகி 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில், 'விக்ரம்' உலகம் முழுவதும் ரூ.300 கோடியை எட்டியுள்ளதாக சில திரைப்பட வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் சிலர், ரூ.250 கோடி வசூலைத்தாண்டி, ரூ.300 கோடியை நெருங்கிவருவதாக கூறுகின்றனர்.
எப்படியிருந்தாலும், நடப்பாண்டில் வெளியான படங்களில் 'விக்ரம்' படத்துக்கு முன்னதாக அஜித்தின் வலிமை ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்து முதலிடத்திலிருந்தது. அதற்கு அடுத்த இடத்தில், ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்து விஜய்யின் 'பீஸ்ட்' இடம்பெற்றிருந்தது. தற்போது இந்த இரண்டு படங்களின் சாதனையை முறியடித்துவிட்டு ரூ.300 கோடியை கமலின் 'விக்ரம்' நெருங்கி வருகிறது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை, உலக அளவில் 300 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து அனைவரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ரஜினியின் 'எந்திரன்' திரைப்படம். அதற்கு அடுத்தபடியாக 2016-ம் ஆண்டு வெளியான 'கபாலி' படத்தின் மூலம் ரூ.320 கோடி வசூலித்து தனது சாதனை தானே முறியடித்தார் ரஜினி. அதேபோல 2018-ம் ஆண்டு வெளியான 2.0 படத்தின் மூலம் உலக அளவில் ரூ.700 கோடியை வசூலித்து உச்சபட்ச சாதனை ரஜினி நிகழ்த்தியிருக்கிறார்.
அந்த வகையில், பார்க்கும்போது, '2.0', 'கபாலி' 'எந்திரன்' திரைப்படங்களைத் தொடர்ந்து ரஜினிக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தை பிடித்துள்ளது 'விக்ரம்' திரைப்படம்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago