‘லைஃப் டைம் செட்டில்மென்ட்’ - லோகேஷ் கனகராஜுக்கு லெக்ஸஸ் காரை பரிசாக வழங்கிய கமல்ஹாசன் 

By செய்திப்பிரிவு

'விக்ரம்' திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு விலை உயர்ந்த 'லெக்ஸஸ்' கார் ஒன்றை தயாரிப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன் பரிசாக அளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த திரைப்படம் 'விக்ரம்'. பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், அர்ஜூன் தாஸ், காயத்ரி, என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையைமத்துள்ளார். கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியான 3 நாட்களிலேயே இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலைப்பெற்று சாதனை படைத்துள்ளது.

சமூக வலைதளங்கள் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக 'விக்ரம்' படம் குறித்த விவாதங்களே மேலெழுந்துள்ளன. இதனிடையே லோகேஷ் கனகராஜுக்கு நேற்று கமல் எழுதியிருந்த கடித்ததில், "அன்பு லோகேஷ், என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களைவிட வித்தியாசமாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள்.

ஆனால், அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணி திறைமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதைவிடவும் அதிகம். உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்பதை நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூ டியூப்பை திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும்" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு கமல் மற்றொரு சர்ப்ரைஸூம் கொடுத்து அசத்தியிருக்கிறார்.'விக்ரம்' திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு விலை உயர்ந்த 'லெக்ஸஸ்' கார் ஒன்றையும் பரிசளித்திருக்கிறார்.

இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதுதவிர, இந்தப் படத்தில் பணியாற்றிய லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு 'அப்பாச்சி 160 ஆர்டிஆர்' இருசக்கர வாகனத்தையும் கமல் பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

39 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்