சென்னை: கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு டூடுல் வெளியிட்டு அசத்தியுள்ளது அமுல் இந்தியா நிறுவனம். இது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் ஆகியோர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். கடந்த 3-ஆம் தேதி வெளியாகி இருந்தது 'விக்ரம்'. தமிழ்நாடு அளவில் மட்டுமின்றி இந்தியா, உலக அளவிலும் படம் வெளியான அனைத்து இடங்களிலும் தரமான வசூலை ஈட்டி வருகிறது இந்தத் திரைப்படம். எப்படியும் ரூ.150 கோடி வசூலை முதல் மூன்று நாட்களில் கடந்திருக்கும் என தெரிவித்துள்ளனர் சினிமா வணிகம் சார்ந்த வல்லுநர்கள்.
ரசிகர்கள் மத்தியிலும் பாசிட்டிவான வரவேற்பை பெற்றுள்ளது 'விக்ரம்'. கதை, இசை, காட்சி அமைப்பு, சண்டைக் காட்சிகள், எடிட்டிங் என அனைத்தும் அற்புதமாக அமைந்துள்ளது. நடிகர் சூர்யா கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் 'மல்டிவெர்ஸ்' திரைப்படம் என இதனை சொல்லலாம். 'கைதி' படத்தின் கதைக்கும், இதற்கும் தொடர்பு உள்ளது. அதில் வரும் கதாபாத்திரங்கள் சில இதிலும் வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் முன்னணி உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம் 'விக்ரம்' படத்தின் கமல் கெட்டப்பை அப்படியே அமுல் சின்னமான அமுல் பேபிக்கு கொடுத்து விளம்பரம் செய்துள்ளது. நடப்பு நிகழ்வுகளை வைத்து காட்ர்டூன் வரைந்து விளம்பரமாக வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது அந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு பகுதியாக இது வெளியிடப்பட்டுள்ளது.
» நார்வே செஸ் தொடர்: 50 நகர்வுகளில் கார்ல்சனை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்
» நாட்டுக்காக கோல் பதிவு செய்த ரொனால்டோ: ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிய தாய்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago