சுந்தர்.சி-யின் ‘காஃபி வித் காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'காஃபி வித் காதல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த ஆண்டு 'அரண்மனை 3' படம் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். குஷ்புவின் 'அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்' மற்றும் 'பென்ஸ் மீடியா நிறுவனங்கள்' இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

மூன்று நாயகர்கள், மூன்று நாயகிகள் நடிக்கும் படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 75 நாட்கள் நடைபெற்று தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 'காபி வித் காதல்' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்