'ஏஜென்ட் டீனா' கதாபாத்திரத்தின் மூலமாக 'விக்ரம்' படத்தில் கவனம் பெற்றிருக்கிறார் வசந்தி. அவரது கதாபாத்திரம் குறித்தும், அவரைப் பற்றியும் சற்றே விரிவாகப் பார்ப்போம். (அலர்ட்: இன்னும் விக்ரம் படம் பார்க்காதோர் இந்தச் செய்திக் கட்டுரையைத் தவிர்க்கலாம்).
ஒரு பெருவெடிப்பிற்கு முன் கடல் அமைதியாக இருப்பதைப்போல, பெரும் புயலுக்கு முன் நிலவும் அமைதியைப்போலத்தான் ஏஜென்ட் டீனாவும் அதுவரை அமைதியாக இருப்பார். அதற்கான எந்த அறிகுறியும் அவரிடம் இருக்காது. அமைதியாக வழக்கமான ஒருவரைப்போலத்தான் நம்மில் ஒருவராக இருப்பார். ஆபத்து காலங்களில் சீறிப்பாய்ந்து கொத்தும் நாகப்பாம்பை போல, ஆபத்தொன்று நிகழும்போது ஏஜென்ட் டீனா தன் மொத்த பலத்தையும் பிரயோகித்து எதிரிகளை அடித்து துவம்சம் செய்திருப்பார்.
உண்மையில் 'விக்ரம்' படத்தில் பெரிய நடிகர்களுக்கு அடுத்தப்படியான கூஸ்பம்ஸ் காட்சி என்றால், அது ஏஜென்ட் டீனாவின் அந்த அதிரடிக் காட்சிதான்.
'விஸ்வரூபம்' முதல் பாகத்தில் அதுவரை அப்பாவியாக இருக்கும் கமல், ஒரு சில விநாடிகளுக்குள்ளாக சுற்றியிருப்பவர்களை சூறையாடும் காட்சிகள் இன்றும் நம்மால் மறக்கமுடியாது. அந்தப் பின்னணி இசையில், கமலின் ஸ்டன்ட் காட்சி திரையை தீப்பிடிக்க வைத்திருக்கும்.
» “தமிழுக்காக ‘வீட்ல விஷேசம்’ திரைக்கதையை மாற்றியுள்ளோம்” - ஆர்ஜே பாலாஜி
» ‘விக்ரம்’ வசூல் சாதனை: 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி; உலக அளவில் ரூ.150 கோடி
சொல்லப்போனால், அதையொத்த ஒரு 'டிரான்ஸ்ஃபமேஷன்' காட்சியை மீண்டும் திரையில் பார்க்க வாய்ப்புள்ளதா என ஏங்கித் தவித்த ரசிகர்களுக்கு, 'விக்ரம்' படத்தில் ஏஜென்ட் டீனாவின் அதிரடிக் காட்சிகள் மூலம் விருந்து படைத்திருப்பார் லோகேஷ் கனகராஜ்.
பொதுவாக நாயகர்களின் வீடுகளில் அவரது குடும்பத்தினர் தனியாக இருக்கும்போது, அந்த நாயகன் வீட்டிலிருந்து வெளியே சென்ற நேரம் பார்த்து எதிரிகள் உள்ளே நுழைவார்கள். அப்போது எவ்வளவு நேரமானாலும், எவ்வளவு தொலைவானாலும், மீட்பர்களாக அந்த நாயகர்கள்தான் வந்து குடும்பத்தை மீட்டாகவேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் சேதுபதி நடித்த 'சேதுபதி' படத்தில் கூட, எதிரிகளை நாயகனின் மகன் தான் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டுவார். தெளிவாக ஆண்களை மீட்பராக சித்தரித்திருக்கும் அந்தப் படம்.
ஆனால், 'விக்ரம்' படத்தில் எதிரிகள் நுழைந்துகொண்டிருக்கும் வேளையில், அதுவரை அமைதியாக இருந்த பெண், தன்னைச் சுற்றியிருக்கும் ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தி தாக்குதலை நிகழ்த்துவார்.
அவர் சண்டைப்போட்டுக் கொண்டிருக்கும் வேளையில், சரியாக அவர் தன் கூந்தலை முடிந்துகொள்ளும் ஃப்ரேம் அப்படியே ஃப்ரீஸ் ஆகி அவருக்கு பின்னால் 'Agent Tina, SPY, Batch 1986' என்ற டைட்டில் வரும்போது ஒட்டுமொத்த திரையரங்கும் அலறுகிறது.
'ஏஜென்ட் டீனா ரிப்போர்டிங் சார்' என அவர் கூறும்போது தொடங்கும் ஒட்டுமொத்த திரையரங்கின் ஆர்ப்பரிப்பும் சண்டைக்காட்சி முடிந்த பின்பும் நீடிக்கும். வழக்கமான நாயகர்களின் அதிரடிக் காட்சிகளால் எழுப்பப்பட்டு வந்த சப்தம், பெண் ஒருவரின் அதிரடிக் காட்சிக்காக திரையரங்கே ஆர்பரித்தது அண்மை சினிமாவில் இது அரிதான காட்சிதான்.
குறிப்பாக 'விக்ரம்' போன்ற மூன்று முன்னணி நாயகர்கள் நடித்திருக்கும் ஒரு படத்தில், அவர்களைத் தாண்டியும் படம் முடித்து வரும்போது மனதில் தேங்கி விடுகிறார் ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தில் நடித்த வசந்தி.
ஆம்! வசந்திதான் 'விக்ரம்' படத்தில் ஏஜென்ட் டீனாவாக தோன்றி மிரட்டியிருப்பார். வசந்தியை பொறுத்தவரை அவர், திரைப்படங்களில் உதவி நடன இயக்குநராக பணியாற்றி வந்தவர். நடனத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட வசந்தி, குழு நடனக் கலைஞராக திரையுலகில் அறிமுகமாகி, அவரது திறமையால், பல நடன இயக்குநர்களுடன் உதவி நடன இயக்குநராக பணியாற்றினார். நயன்தாரா, விஜய், அஜித், சூர்யா என டாப் ஹீரோக்களுக்கு இவர் கோரியோகிராப் செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். நடிகர் விஜய் நடித்த 'பகவதி' படத்தில் 'அள்ளு அள்ளு' பாடலிலும், அஜித் நடித்த 'வில்லன்' படத்தில் 'அடிச்சா நெத்தி அடி' பாடலிலும் நடனமாடியிருப்பார்.
பிருந்தா மாஸ்டரிடமும் உதவி நடன இயக்குனராக பணியாற்றியவர் வசந்தி. அண்மையில் வெளியான 'வலிமை' படத்தில் இடம்பெற்ற 'நாங்க வேற மாரி' பாடலுக்கு பணியாற்றியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத் துறையிலிருக்கும் அவர், தற்போது நடன இயக்குநர் தினேஷுடன் பணியாற்றி வருகிறார். 'விக்ரம்' படத்தின் மூலம் தற்போது நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'மாஸ்டர்' படத்தில் நடன இயக்குநர் தினேஷ் பணியாற்றியிருப்பார். அப்போதுதான் லோகேஷ் கனகராஜுக்கு வசந்தி அறிமுகமானார். இதையடுத்து அவருக்கு 'விக்ரம்' படத்தில் நடிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. நடனத்தை ஆஸ்தான தொழிலாக கொண்டவர் முதன்முறையாக சண்டைக்காட்சிக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்க நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.
படத்தில் எண்ண்ணிப் பார்த்தால் வெறும் 4 காட்சிகளில் மட்டுமே திரையில் தோன்றியிருப்பார். 4 நிமிடம் வரும் அந்த ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். ஹாலிவுட் இயக்குநர் டாரன்டினோவின் 'கில் பில்' படத்தில் வரும் கதாபாத்திரத்துடன் அவரை இணைத்து ரசிகர்கள் மீம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago