அட்லீ - ஷாருக்கானின் ‘ஜவான்’ - சமந்தாவுக்கு பதிலாக நயன்தாரா! 

By செய்திப்பிரிவு

ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தில் நாயகியாக நடிக்க முதலில் சமந்தா தேர்வு செய்யப்பட்டதாகவும், அவர் மறுக்கவே பின்னர் அந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கிய அட்லீ அடுத்ததாக இந்திப் படத்தை இயக்கி வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், படம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பிரியாமணி, யோகிபாபு, உள்ளிட்ட தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.

நயன்தாரா முதன்முறையாக பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும், ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் நடிக்கின்றனர். அண்மையில் இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பான் இந்தியா முறையில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கும் கதாபாத்திரத்திற்கு முதலில் சமத்தா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 2019-ம் ஆண்டு நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, இயக்குநர் அட்லீ, சமந்தாவிடம் படத்தில் நடிக்க கேட்டதாகவும், அவர் தனிப்பட்ட காரணங்களால் மறுத்ததால், அந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு சென்றுவிட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்