“உங்களுடன் திரையில் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவானது” என ‘விக்ரம்’ படத்தில் கமலுடன் நடித்தது குறித்து நடிகர் சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று (ஜூன் 3) திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது 'விக்ரம்' திரைப்படம்.
அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் திரையரங்கு ஆரவராத்தால் நிரம்பிவிடுகிறது. ஆரம்பத்தில் சூர்யா நடிப்பதை வெளியிடமால் சஸ்பென்ஸாக வைத்திருந்தது படக்குழு,
ஆனால், இது தொடர்பான செய்திகள் தீயாய் பரவியதும் படத்தில் சூர்யா நடிப்பதை ஒப்புகொண்டனர். அவர் நடிப்பதாக தெரிவித்திருந்தாலும், எந்தக் கதாபாத்திரத்தில் எப்போது வருவார் என்பது குறித்த ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகமாவே இருந்தது. படத்தை பார்த்தவர்கள் சூர்யா வரும் காட்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
» 'இந்த மாதிரி ஒரு ரிலீஸை என் வாழ்நாளில் பார்த்ததில்லை' - நடிகர் கமல் நெகிழ்ச்சி
» கதைசொல்லி பேருந்து, கவனம் ஈர்க்கும் கோவை சரளா... ஆர்வம் தூண்டும் ‘செம்பி’ ட்ரெய்லர்!
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனுடன் திரையில் நடித்தது குறித்த தனது மகிழ்ச்சியை சூர்யா வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அன்பான கமல்ஹாசன் அண்ணா, எப்படி சொல்றது? உங்களுடன் திரையில் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவானது. இதை சாத்தியப்படுத்திய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. அன்பைக்கண்டு மகிழ்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago