கதைசொல்லி பேருந்து, கவனம் ஈர்க்கும் கோவை சரளா... ஆர்வம் தூண்டும் ‘செம்பி’ ட்ரெய்லர்!

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செம்பி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.

கும்கி, மைனா முதலான படங்களை இயக்கியுள்ள பிரபு சாலமன் இயக்கத்தில் ‘செம்பி’ உருவாகியுள்ளது. இதில் கோவை சரளா, தம்பி ராமையா, அஷ்வின் குமார், கு.ஞானசம்பந்தம் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் அன்பு என்ற பேருந்து முக்கியக் கதாபாத்திரமாக இருக்கும் எனத் தெரிகிறது. ட்ரெய்லரில் கதைசொல்லியாக அந்தப் பேருந்தை கையாண்டிருக்கிறார் இயக்குநர். 'நான் பேருந்து பேசுகிறேன்' என்ற தொனியே மிகவும் அழகாக உள்ளது.

பல்வேறு மக்களின் வாழ்வியலை பேசுகிறது இந்தப் படம். அதே நேரத்தில் வழக்கமான பிரபு சாலமன் படங்களில் இருக்கும் பசுமை டச்சும் இதில் இடம்பெற்றிருக்கிறது. முக்கியமாக வித்தியாசமான மேக்-அப் மற்றும் நடிப்பையும் வெளிப்படுத்தி அசத்துகிறார் கோவை சரளா. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தபோதே அது பேசுபொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. 2.01 நிமிடம் ஓடுகிறது இந்த ட்ரெய்லர். அதைப் பார்க்கும் போதே ’செம்பி’ உலகத்திற்கு எப்போது செல்வோம் என பட ரிலீஸ் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

ட்ரெய்லர் இதோ...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்