“காஷ்மீர் பண்டிட்களை நாம் காக்க வேண்டும்” - நடிகை கங்கனா ரனாவத்

By செய்திப்பிரிவு

மும்பை: காஷ்மீர் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரனாவத், “பண்டிட் சமூக மக்களை நாம் காக்க வேண்டும்” என்று குரல் கொடுத்துள்ளார்.

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த மே 1-ஆம் தேதி முதல் இதுவரையில் சுமார் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் வங்கி மேலாளர், ஆசிரியர் மற்றும் தொலைக்காட்சி ஊழியரும் அடக்கம். அதேபோல இதில் பலியானவர்கள் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்றும், இஸ்லாமியர் அல்லாதோர் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் போராடி வருகின்றனர். காஷ்மீரில் அரங்கேறி வரும் படுகொலைகள் குறித்து பாதுகாப்பு துறையின் மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்தப் படுகொலை தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் தனது கருத்தை தெரிவித்துள்ளார். "காஷ்மீர் பண்டிட்களை நாம் காக்க வேண்டும்" என்று அவர் குரல் கொடுத்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி ஒன்றுக்கு ரியாக்ட் செய்து, அதனை ஸ்டோரி வடிவிலும் பகிர்ந்துள்ளார்.

காஷ்மீர் பண்டிட்களுக்கு ஆதரவாக அவர் குரல் குரல் கொடுப்பது இது முதல் முறை அல்ல. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெளிவந்தபோது அனைவரும் இந்தப் படத்தை தவறாமல் பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தப் படம் 1990-களில் காஷ்மீரை விட்டு வெளியேறிய காஷ்மீர் பண்டிட் மக்கள் குறித்து பேசியிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE