இயக்குநர் அட்லீயுடன் - ஷாருக்கான் இணையும் ஜவான் படத்தின் டைட்டில் வீடியோ வெளியீடு

By செய்திப்பிரிவு

இயக்குநர் அட்லீயுடன் ஷாருக்கான் இணையும் புதிய படத்திற்கு 'ஜவான்' என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கிய அட்லீ அடுத்ததாக இந்திப் படத்தை இயக்கி வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பிரியாமணி, யோகிபாபு, உள்ளிட்ட தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். நயன்தாரா முதன்முறையாக பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும், ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர,இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாக உள்ளது. இந்த வீடியோவில் துப்பாக்கி ஒன்றை கையில் வைத்திருக்கும் ஷாருக்கான் முகத்தை மறைத்திருக்கிறார். இத்துடன் சிரித்தபடியே, 'ரெடி' என பேசுவதோடு வீடியோ நிறைவடைகிறது. இந்த வீடியோவின் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படம் குறித்து ஷாருக்கான் கூறுகையில், “ஜவான்” திரைப்படம் மொழி, நிலப்பரப்பு தாண்டி அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு உலகளாவிய கதை. இந்த தனித்துவமான திரைப்படத்தை உருவாக்குவதற்கான பெருமை அட்லீயை தான் சேரும், ஆக்‌சன் படங்களை விரும்பும் எனக்கு இந்த படம் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது! திரைப்படத்தின் ஒரு முன்னோட்டமாக இந்த டீசர் இருக்கும்'' என்றார்.

ஜவான் படத்தை உருவாக்குவது குறித்து இயக்குநர் அட்லீ பேசுகையில், “ஜவான்” உணர்வுப்பூர்வமான டிராமா, ஆக்‌சன் என எல்லாம் கலந்த திரைப்படமாக இருக்கும். பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க விரும்புகிறேன், அவர்கள் அனைவரும் ஒன்றாக ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படத்தையும், முன் எப்போதும் இல்லாத வகையில் ஷாருக்கானை சிறப்பாகவும் காட்ட முயற்சித்துள்ளேன்'' என்றார்.

ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் ‘ஜவான்’ திரைப்படத்தை ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, கௌரி கான் தயாரிக்கிறார். “ஜவான்” திரைப்படம் ஜூன் 2, 2023 அன்று ஐந்து மொழிகளில் ஷாருக்கானின் முதல் பான் இந்திய படமாக வெளியிடப்படுகிறது.

வீடியோ இதோ :

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

33 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

மேலும்