இயக்குநர் அட்லீயுடன் ஷாருக்கான் இணையும் புதிய படத்திற்கு 'ஜவான்' என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கிய அட்லீ அடுத்ததாக இந்திப் படத்தை இயக்கி வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பிரியாமணி, யோகிபாபு, உள்ளிட்ட தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
நயன்தாரா முதன்முறையாக பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும், ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
» புகழஞ்சலி | கேகே தனது பாடல்களின் வழியே உயிர் வாழ்வார் - முதல்வர் ஸ்டாலின்
» குட்டிப் பாடல்களால் ரசிகர்களின் மனதைக் கட்டிப்போட்ட இளையராஜா - சிறப்புப் பகிர்வு
பெயரிடப்படாத இந்தப் படத்தின் தலைப்பு 'லயன்' என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்தப் படத்தின் டீசர் தயாராகி அதற்கான சென்சார் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், அதிலிருந்து கசிந்த தகவலின்படி தான் இந்தப் படத்திற்கு 'ஜவான்' என தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
27 mins ago
சினிமா
42 mins ago
சினிமா
55 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago