அவதூறு வழக்கு: ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு - ஆம்பர் ஹேர்ட்டுக்கு அபராதம் விதிப்பு

By செய்திப்பிரிவு

தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் மீது பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.

'ஜாக் ஸ்பாரோ' ஜானி டெப். 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' சீரிஸ் படங்களில் 'ஜாக் ஸ்பாரோ' என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைச் சேர்த்த ஜானி டெப், 50 வயதுக்கு மேல் தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல் அவரை கரம்பிடித்தார். 15 மாதங்களில் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தது பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர்.

இதன்பின் 2018-ல் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார் ஆம்பர் ஹேர்ட். பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அந்தக் கட்டுரையில் ஜானியின் பெயரை குறிப்பிடாமல், அவர் சொன்ன விஷயங்கள் ஹாலிவுட் உலகை அதிரவைத்தது. கட்டுரை வெளியானதுமே ஜானியின் ஹாலிவுட் சாம்ராஜ்யம் கட்டம் கட்டப்பட்டது. பல படங்கள் அவரின் கையை விட்டுச் சென்றன. ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' படம் மட்டுமல்ல, ஜானியை 'ஜாக் ஸ்பாரோ'வாக உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ’பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்திலிருந்தும் ஜானி நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன்பின் கடந்த 2018ல் ஜானி டெப், ஆம்பர் மீது கட்டுரைக்கு குற்றம்சாட்டி அவதூறாக ரூ.380 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்தார். தனது சினிமா வாழ்க்கையை ஆம்பர் சிதைத்து வருவதாக ஜானி தொடர்ந்த வழக்குதான் ஹாலிவுட் திரையுலகில் கடந்த சில வாரங்களாக ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. அவதூறு வழக்கு மூன்று ஆண்டுகள் முன்பு தொடங்கினாலும், கடந்த சில நாட்களாக வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளது. தீர்ப்பு வாசிக்கும் நிகழ்வில் ஜானி கலந்து கொள்ளவில்லை. ஆம்பர் தரப்பு இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும், இந்த வழக்கில் ஜானி டெப் அவதூறுக்கு ஆளானதை நிரூபிக்க முடிந்தது என தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், ஆம்பர் 10 மில்லியன் டாலர் இழப்பீட்டு தொகையாகவும், 5 மில்லியன் டாலரை தண்டனைக்குரிய இழப்பீட்டு தொகையாகவும் வழங்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்