'கைதி' இரண்டாம் பாகத்தில் கார்த்தியுடன் சூர்யா, கமல் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படம் நாளை மறுநாள் ( ஜூன் 3) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. 'விக்ரம்' தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், 'விக்ரம்' படத்தில் லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான 'கைதி' படத்தின் ரெஃபரென்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. 'டில்லி' கதாபாத்திரம், அர்ஜுன் தாஸ் சிறப்புத் தோற்றம், பிரியாணி என பல காட்சிகள் படம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
மேலும், ‘கைதி’ முதல் பாகம் பார்த்தவர்களுக்கு, ஒருவித கனெக்டிவிட்டியுடன் கூடிய அனுபவம் ‘விக்ரம்’ படம் மூலம் கிட்டும் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால், லோகேஷ் கனகராஜின் 'கைதி 2' படத்தின் சில காட்சிகளில் கார்த்தியுடன் சூர்யா, கமல் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாகவும் உள்வட்டாரத் தகவல் கூறுகின்றன. ஆனால், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறது என்பது மட்டும் இப்போதைக்குத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago