சிம்புவின் மாநாடு படம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சிம்பு படங்களில் நீண்ட நாள்களுக்கு பிறகு வெளியான இப்படம், ரூ.100 கோடி வசூலை பெற்றது.
தற்போது இந்தப் படம், 117 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இதுதொடர்பான பதிவில், "இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாநாடு படம் அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சிலம்பரசன், இயக்குநர் வெங்கட் பிரபு போன்றோருக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago