முதலில் கண்ணீர்... கடைசியில் ரத்தம்... - அருண் விஜய்யின் ‘யானை’ ட்ரெய்லர்!

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் அருண் விஜய்யின் 'யானை' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கடைசி நொடிகள் தவிர வசனம் ஏதும் இல்லாமல் கவனம் ஈர்க்கிறது இந்த ட்ரெய்லர்.

அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராமச்சந்திர ராஜு (கே.ஜி.எஃப் வில்லன் - கருடன்), யோகி பாபு, ராதிகா, புகழ், அம்மு அபிராமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இதில் நடித்துள்ளது.

இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார். அவரது வழக்கமான மசாலா குடும்பக் கதை ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மொத்தம் 2.19 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த ட்ரெய்லரில் கடைசி சில நொடிகள் மட்டும்தான் வசனம் வருகிறது. ஜூன் 17-ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் எமோஷனில் ஆரம்பித்து ஆக்‌ஷனில் முடிகிறது. முதலில் கதாபாத்திரங்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இறுதியில் நாயகனின் அதிரடியில் ரத்தம் தெறிக்கிறது.

இந்த ட்ரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

ட்ரெய்லர் இங்கே

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்