ரஜினியுடன் கமல் சந்திப்பு - வைரலாகும் புகைப்படங்கள்

By செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்துடன் கமல் சந்தித்த புகைப்படம் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. விக்ரம் படத்தை முன்னிட்டு இந்த சந்திப்பு அரங்கேறியுள்ளது.

'கைதி', 'மாஸ்டர்' உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் 'விக்ரம்'. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. 8 மாதங்களில் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அனிருத் இசையமைக்கும் படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனைப்பொறுத்தவரை அவர் கடைசியாக 2018-ம் ஆண்டு விஸ்வரூபம்-2 படத்தில் நடித்திருந்தார். அதன்பின் அரசியலுக்கு திரும்பியவர், படத்தில் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார். அதன்பின், தற்போது 4 ஆண்டுகள் கழித்து அவருடைய படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் பெரும் படத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

ஜூன் 3-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை கமல்ஹாசன் நேரில் சந்தித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ரஜினி, கமல்ஹாசன் இருவருக்கும் நன்றி. உங்கள் இருவரின் நட்பு எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. லவ் யூ சார்ஸ்'' என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்