மோகன் ஜி படத்தின் டைட்டில் லுக் வெளியீடு 

By செய்திப்பிரிவு

இயக்குநர் மோகன் ஜி இயக்கும் 'பகாசூரன்' படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் மோகன் ஜி. அவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான 'ருத்ர தாண்டவம்' திரைப்படம் குறைந்த முதலீட்டில் பெரும் லாபத்தை ஈட்டியது. இந்தப் படத்தில் ரிஷி ரிச்சர்ட், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில் அடுத்ததாக அவர் ஜிஎம்பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் புதிய பட உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த படத்தில், நாயகனாக செல்வராகவன் நடிக்க உள்ளதாக ஏற்கெனவே மோகன் ஜி தெரிவித்திருந்தார். அவருடன் நடிகர் நட்ராஜூம் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், மோகன்ஜி இயக்கும் புதிய படத்திற்கு 'பகாசூரன்' என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாபாரதம் புராண கதையின் அடிப்படையில், இந்த கதை அமையும் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்