பஞ்சதந்திரம் பாணியில் 'விக்ரம்' பட புரோமோஷன் - கவனம் ஈர்த்த வீடியோ

By செய்திப்பிரிவு

'விக்ரம்' படம் ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ள படத்தின் விளம்பர பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம், ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கமல் ஹாசன் நடிப்பில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரவிருக்கிறது ‘விக்ரம்’ திரைப்படம். இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கி வரும் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. கமல் ஒருபுறம் மற்ற மாநிலங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். நேற்று கேரளா சென்ற அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்படி தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற அவருக்கு ஹெலிகாப்டரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மெர்சிடஸ் பென்ஸ் கம்பெனியின் உயர் ரக ஹெலிகாப்டரில் அந்த வரவேற்பு இருந்தது. இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

மறுபுறம், கமலின் பஞ்சதந்திரம் படத்தின் நட்சத்திரங்கள் யூகி சேது, ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன் ஆகியோர் பஞ்சதந்திரம் படத்தின் ஒரு காட்சியை மீண்டும் ரீகிரியேஷன் செய்துள்ளனர். பஞ்சதந்திரம் படத்தில் ஐந்து நாயகர்களும் ஒரே நேரத்தில் போனில் பேசும் காட்சியை போலவே விக்ரம் படத்தை பற்றி புரோமோஷன் செய்துள்ளனர். இந்த வீடியோ வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

54 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

மேலும்