10 நாயகிகள், பிரமாண்ட விழா - லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ படத்தின் புதிய அப்டேட்

By செய்திப்பிரிவு

லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்து வரும் ‘தி லெஜண்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்து வரும் ‘தி லெஜண்ட்’ விரைவில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, இந்தப் படத்தின் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, பிரமாண்ட விழா ஒன்று வைத்து ‘தி லெஜண்ட்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா நடக்கவுள்ளது. ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில் பாடல் வெளியீட்டிலும் அதற்கேற்ப பான் இந்திய நாயகிகளை அழைத்து பிரமாண்டம் காட்டியிருக்கிறது படக்குழு. 29-ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விழாவில், பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா உள்ளிட்ட நாயகிகள் கலந்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ஏற்கனவே, ‘மொசலோ மொசலு’ என்ற முதல் பாடலை மணிரத்னம், ராஜமெளலி, இயக்குநர் சுகுமார் ஆகியோர் மூலமாக வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார் லெஜண்ட் சரவணன். அவர் நடித்த விளம்பரங்களை இயக்கிய ஜேடி - ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கி வருகிறார்கள். நாயகியாகப் புதுமுகம் கீர்த்திகா திவாரி நடித்து வருகிறார். அவர் தவிர்த்து மற்றொரு நாயகி கதாபாத்திரத்தில் ஊர்வசி ரவுடேலா நடித்துள்ளார்.

பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகரும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

32 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்