“நான் அதிர்ஷ்டசாலி” - கடைசி வரை நாய், பூனையுடன்தான் வாழ்க்கை என ட்ரோல் செய்தவருக்கு சமந்தா ரிப்ளை

By செய்திப்பிரிவு

தன்னை சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்தவருக்கு சமத்தான ரிப்ளை கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.

பன்மொழி திரைப்படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார் சமந்தா. அண்மையில் 'குஷி' படத்தின் ஒரு பகுதி ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளார். யசோதா என்ற படத்திலும் நடித்து வருகிறார். சகுந்தலா திரைப்படம் போஸ்ட் புரொடக்ஷன் பணியில் உள்ளது. தமிழில் இவர் நடிப்பில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருபவர் சமந்தா. அவரது பதிவுகளுக்கு லைக்குகளும், கமெண்டுகளும் கணக்கே இல்லாமல் ரசிகர்கள் குவிப்பது வழக்கம். இந்நிலையில், அண்மையில் தனது வளர்ப்பு நாயுடன் இருக்கும் படத்தை பகிர்ந்திருந்தார். அதனை மிஸ் செய்ததாகவும் அவர் சொல்லி இருந்தார். அந்தப் பதிவுக்கு பயனர் ஒருவர் ரிப்ளை கொடுத்துள்ளார். "கடைசிவரை நாய் பூனையுடன் வாழ்ந்துவிட்டு போக வேண்டியதுதான்" என அதில் அவர் சொல்லி இருந்தார்.

அதனை கவனித்த சமந்தா அதற்கு ரிப்ளை கொடுத்துள்ளார். "நான் அதிர்ஷ்டசாலி என கருதுவேன்" என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஹாலிவுட் சினிமாவிலும் சமந்தா அறிமுகமாகவுள்ளது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

மேலும்