“சும்மாவா சொன்னாங்க...” - நடிகர் அஜித் உடனான புகைப்படத்தை பகிர்ந்த தயாநிதி அழகிரி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்துடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் வினோத் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்காக வெள்ளை தாடியுடன் வலம் வருகிறார் அவர். இணையத்தில் அந்த கெட்-அப் வைரலான நிலையில், இப்போது தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். அது சமூக வலைதளத்தில் பரவலாக பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘மங்காத்தா’ படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

"சும்மாவா சொன்னாங்க அல்டிமேட் ஸ்டார்னு. அவர் நம் பக்கத்தில் இருந்தால் அந்த உணர்வை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் தயாநிதி அழகிரி. இதில் அஜித், அவரது மனைவி ஷாலினி, மகள் அனுஷ்கா, தயாநிதி அழகிரி மற்றும் அவரது மனைவியும் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்