யுவன் சங்கர் ராஜாவை நெகிழ வைத்த நடிகர் கார்த்தி

By செய்திப்பிரிவு

நடிகர் கார்த்தி தனது நெருங்கிய நண்பரும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அசத்தல் பரிசு ஒன்றை கொடுத்து நெகிழவைத்துள்ளார்.

கார்த்தியின் பருத்திவீரன், நான் மகான் அல்ல, பையா, பிரியாணி மற்றும் வெளியாகவிருக்கும் விருமன் உள்ளிட்ட படங்களில் பல சூப்பர்ஹிட் பாடல்களை இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. கார்த்தி மற்றும் யுவன் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதும், அந்தப் பருவத்திலிருந்தே இருவருக்குள்ளும் இருக்கும் நல்ல நட்பு, இன்னும் தொடர்கிறது.

இந்தநிலையில் தான் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவனுக்கு நடந்த பாராட்டு விழாவில், அவரை நெகிழவைக்கும் வகையில் பரிசு ஒன்றை கொடுத்து அசத்தியுள்ளார் கார்த்தி. விலையுயர்ந்த பிரீமியம் கைக்கடிகாரம் தான் அந்த பரிசு. தனது அன்பின் அடையாளமாக யுவனுக்கு இந்த விலையுயர்ந்த பரிசை மேடையிலேயே அணிவித்தார் கார்த்தி. இந்த சம்பவம் விழாவில் நெகிழ்வான தருணமாக அமைந்தது.

இதனிடையே, விருமன் படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா விரைவில் தொடங்கவுள்ளார், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31 அன்று விருமன் திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே, விருமானுக்காக யுவன் இசையமைத்து சித் ஸ்ரீராம் பாடிய கஞ்சா பூவு கண்ணால பாடலின் முன்னோட்டம், சுமார் 3.7 மில்லியன் பார்வைகளைப் பெற்று இன்னும் யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

அதேநேரம், விருமன் தவிர, இன்னும் இரண்டு திரைப்படங்கள் கார்த்தியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கிறது. ஒன்று மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிரம்மாண்டப் படைப்பான 'பொன்னியின் செல்வன்'. மற்றொன்று மித்ரன் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லரான 'சர்தார்'. இதில் 'பொன்னியின் செல்வன்' செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், 'சர்தார்' படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்புத் தரப்பு விரைவில் அறிவிக்கவுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்