பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகவுள்ள 'J.பேபி' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் படம் 'J.பேபி'. இந்தப் படத்தை கோல்டன் ரேசியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் பா.ரஞ்சித் படங்களை தயாரித்து வருகிறார். முன்னதாக 'ரைட்டர்' படத்தை மேலே குறிப்பிட்ட நிறுவனங்களுடன் இணைந்து பா.ரஞ்சித் தயாரித்திருந்தார். 'J.பேபி' படத்தில் ஊர்வசி, மாறன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அம்மா மற்றும் அவரது இரண்டு மகன்கள் பற்றிய கதை எனவும், சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை கலந்து இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைக்கிறார். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இப்படத்தின் 'நெடுமரம்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. அன்னையர் தினத்தையொட்டி வெளியாகியுள்ள இந்தப் பாடலை உமா தேவி எழுத, பாடகர்கள் பிரதீப்குமார், அன்னி ஜே இருவரும் பாடியுள்ளனர்.
படத்தின் டீசர் தாய் மற்றும் அவரது இரு மகன்களைச் சுற்றி நடக்கும் கதைக்களம் என்பதை உறுதிப்படுத்துகிறது. அன்னையின் அன்பை மையமாக கொண்டு சென்டிமென்ட் படமாக உருவாகியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்ற உள்ள ஊர்வசியின் கதாபாத்திரம் பிரதானப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. டீசரிலேயே ஊர்வசியின் நடிப்பையும், அவரது அப்பாவித்தனமான கதாபாத்திர வடிவமைப்பையும் காண முடிகிறது.
» ’மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.10 கோடி நஷ்ட ஈடு வழக்கு’ - மகன் உரிமை கோரிய தம்பதிக்கு தனுஷ் நோட்டீஸ்
» 'எனது கருத்தை தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்' - மொழி சர்ச்சை குறித்து நடிகர் கிச்சா சுதீப்
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago