விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் 'கோப்ரா'. 'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' வெற்றிப் படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ’கேஜிஎஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார். ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. ஆனால், படத்திற்கான கதையை முழுமையாக இயக்குனர் முடிக்காத காரணத்தால் படப்பிடிப்பு நீடித்துக் கொண்டே சென்றது. இந்த நிலையில் ’கோப்ரா’ படத்தின் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 11-ம் தேதி படம் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago