'என் மகன் படத்தைப்பார்த்துவிட்டு என்னை கட்டி அணைத்துக் கொண்டார்' என்று தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தெரிவித்துள்ளார்.
'கீதா கோவிந்தம்' படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த படம் 'சர்காரு வாரி பாட்டா'. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்த படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப்பெற்றது. தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது.
இந்நிலையில், ஆந்திராவில் உள்ள குர்ணூல் எஸ்டிபிசி மைதானத்தில், 'சர்காரு வாரி பாட்டா' படத்தின் வெற்றி விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மகேஷ்பாபு, படத்தைப் பார்த்த பின் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன கூறினார்கள் என்பது குறித்து உணர்வுப்பூர்வமாகப் பேசினார்.
» 3 நாட்களில் ரூ.47.50 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் ‘டான்’
» ‘எனக்கு நிறைய கேள்விகள் உள்ளன’ - ட்விட்டரில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த ‘பீஸ்ட்’ இறுதிக் காட்சி
இது தொடர்பாக மேடையில் பேசியவர், ''படத்தைப்பார்த்த பின், என் மகன் கவுதம் எனக்கு கைகொடுத்து, கட்டியணைத்தார். என் மகள் சிதாரா, என்னிடம் 'உங்கள் நடிப்பு சிறப்பாக இருந்தது' எனக் கூறினார். அதேபோல என் தந்தை படத்தைப் பார்த்துவிட்டு, இந்தப் படம் 'போக்கிரி', 'தூக்குடு'வைவிட சிறப்பாக வந்துள்ளது'' என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago