சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் 'நெஞ்சுக்கு நீதி' படத்தைப்பார்த்து படக்குழுவினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'நெஞ்சுக்கு நீதி'. இதில் தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்தப்படத்தைப் போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
படம் வருகின்ற மே 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தை முதலமைச்சர் மு.கஸ்டாலின் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்தப்பின், 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
» ''எந்த மொழியையும் ஒழிக எனக் கூறமாட்டேன், ஆனால், தமிழ் வாழ்க எனச் சொல்வது என் கடமை'' - கமல்ஹாசன்
» நாயுடனான அன்பைப் பேசும் '777 சார்லி' - கவனம் ஈர்க்கும் ட்ரெய்லர்
மே மாதம் 20 அன்று வெளியாகவுள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago