நயன்தாரா நடிக்கும் 'ஓ2' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
எட்டு வயது மகனுடன் நயன்தாரா பேருந்தில் பயணிக்கிறார். மகனுக்கு நுரையீரல் பிரச்சினை இருப்பதால் எப்போதும் கைவசம் சிறிய ரக ஆக்ஸிஜன் சிலிண்டர் வைத்திருக்கிறார். மலைப்பகுதியில் செல்லும்போது பேருந்து விபத்துக்குள்ளாகி சக பயணி ஒருவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. நயன்தாராவிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரைக் கைப்பற்ற சக பயணிகள் முயற்சிக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் பார்வதி என்கிற பெண்ணாக நயன்தாரா தன் மகனைக் காக்க என்ன செய்தார் என்பதுதான் `ஓ2’ படத்தின் கதை.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஜி.எஸ். எழுதி, இயக்கியிருக்கிறார். டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.
டீசரில் நயன்தாரா பேருந்து ஒன்றில் மாட்டிக்கொள்வது போன்றும், தொடர்ந்து பேருந்துக்குள் இருப்பவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டிருக்கின்றனர். அப்போது நயன்தாரா, 'நம்ம பதட்டப்படாம சண்டப்போடாம அமைதியா இருந்தா இன்னும் 12 மணிநேரம் உயிரோடு இருக்கலாம்' என பேசும் வசனத்துடன் டீசர் நிறைவடைகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை இந்த டீசர் அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago