விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் 'குஷி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'குஷி' திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் பார்வையாளர்களை கவரும் வகையில் தோன்றுகின்றனர். 'குஷி' உற்சாகமான, வண்ணமயமான காதல் கதையாக இருக்கும் என்பதை ஃபர்ஸ்ட் லுக் உணர்த்துகிறது. மேலும், முன்னணி ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
» 16, மே, 1929-ல் முதல் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது
» மேற்கு வங்கம் | வாடகை வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சின்னத்திரை நடிகை
'குஷி' தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று வெளியாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago