சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில் பார்த்திபனின் 'இரவின் நிழல்' படம் திரையிடப்பட உள்ளது.
'ஒத்த செருப்பு' படத்திற்கு பின்னர் பார்த்திபன் 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'ஒத்த செருப்பு' படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தைப் போல 'இரவின் நிழல்' படம் 'சிங்கிள் ஷாட்'டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
'இரவின் நிழல்' படத்தில் பார்த்திபன், வரலெட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இது தொடர்பாக பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில், என் "இரவின் நிழல் "திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சி கலந்த உள்ளடக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
18 mins ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago