கேன்ஸ் பட விழாவில் திரையிடப்படும் தமிழ்ப் படம் ராக்கெட்ரி

By செய்திப்பிரிவு

சர்வேதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில் தமிழ்ப் படமான ராக்கெட்ரி திரையிடப்பட உள்ளது. அந்த விழாவில் திரையிடப்படவுள்ள இந்தியப் படங்களின் பட்டியலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படடும் இந்திய திரைப்படங்களில் ஆர்.மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி என்னும் திரைப்படமும் ஒன்றாகும். இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள ராக்கெட்ரி- தி நம்பி எபெஃக்ட் எனும் திரைப்படம் உலக பிரீமியர் காட்சியாக நடைபெறும்.

அதேபோல் மராத்தி மொழிப்படமான கோதாவரி, இந்தி மொழிப்படமான ஆல்பா பீட்டா காமா, மிஷின் மொழியைச் சேர்ந்த பூம்பா ரைட், இந்தி, மராத்தி, மொழியைச் சேர்ந்த துயின், மலையாள மொழிப் படமான ட்ரீ ஃபுல் ஆஃப் பேரட்ஸ் ஆகிய படங்களும் கேன்ஸ் படவிழாவில் திரையிடப்படவுள்ளன.

ராக்கெட்ரி திரைப்படம் பலாய்ஸ் கே அரங்கிலும் மற்ற திரைப்படங்கள் ஒலிம்பியா திரையரங்கிலும் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 17ம் தேதி பிரான்ஸில் தொடங்க இருக்கும் 75-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஏஆர் ரஹ்மான், நயன்தாரா, மாதவன், தமன்னா உள்ளிட்ட இந்திய திரைப்பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE