அஜித்தின் 'ஏகே 61' படத்தில் நடிகர் வீரா? - புது அப்டேட்

By செய்திப்பிரிவு

அஜித் நடிக்கும் 'ஏகே 61' படத்தில் நடிகர் வீரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'வலிமை' படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் 'ஏகே61' என அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 11 முதல் படப்பிடிப்பு தொடங்கி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பை குறுகிய காலத்திற்குள் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கோக்கேனும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது மற்றொரு நடிகரும் ஏகே61 படத்தில் இணந்துள்ளதாக கூறப்படுகிறது. 'ராஜதந்திரம்' பட நடிகர் வீராவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜதந்திரம், நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் வீரா நடித்துள்ளார். த்ரில்லர் படமான 'ராஜதந்திரம்' திரைப்படத்தில் அவரின் முக்கிய பாத்திரத்திற்காக நன்கு அறியப்பட்டவர். . விரைவில் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. 'ஏகே 61' திரைப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE