அன்னையர் தினத்தையொட்டி பா.ரஞ்சித்தின் 'J.பேபி' படத்தின் நெடுமரம் பாடல் வெளியீடு

By செய்திப்பிரிவு

அன்னையர் தினத்தையொட்டி பா.ரஞ்சித் தயாரிக்கும் 'J.பேபி' படத்தின் நெடுமரம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாடகர்கள் பிரதீப் குமார், அன்னி ஜே குரலில் பாடல்கள் கவனம் பெற்றுள்ளது.

சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் படம் 'J.பேபி'. இந்த படத்தை கோல்டன் ரேசியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் பா.ரஞ்சித் படங்களை தயாரித்து வருகிறார். முன்னதாக 'ரைட்டர்' படத்தை மேலே குறிப்பிட்ட நிறுவனங்களுடன் இணைந்து பா.ரஞ்சித் தயாரித்திருந்தார். 'J.பேபி' படத்தில் ஊர்வசி, மாறன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அம்மா மற்றும் அவரது இரண்டு மகன்கள் பற்றிய கதை எனவும், சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை கலந்து இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைக்கிறார். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இப்படத்தின் 'நெடுமரம்' என்ற பாடல் வெளியாகியுள்ளது. அன்னையர் தினத்தையொட்டி வெளியாகியுள்ள இந்த பாடலை உமா தேவி எழுத, பாடகர்கள் பிரதீப்குமார், அன்னி ஜே இருவரும் பாடியுள்ளனர்.

பாடலைக் காண :

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE