நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நீதிபதிக்கு எதிராகக் குற்றச்சாட்டு

By ஆர்.ஜெயக்குமார்

கேரளத்தில் 2017-ல் முன்னணி நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான திலீப் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கில் கூட்டுச்சதி உண்டு என்று முதன்முதலாக திலீபின் முன்னாள் மனைவியும் மலையாள முன்னணி நடிகையுமான மஞ்சு வாரியார் குற்றம் சாட்டினார். அவர் இந்த வழக்கில் சாட்சியாகவும் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் மலையாளத்தின் முன்னணி நடிகையும் திலீபின் மனைவியுமான காவ்யா மாதவனுக்குப் பங்குண்டு எனக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்களில் பலரும் விசாரணையின்போது பக்கம் மாறினர். திலீப் இதற்குப் பின்னால் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையில் திலீப், விசாரணை அதிகாரி பைஜூ பவ்லோஸைக் கொல்ல திலீப் திட்டமிட்டதாக திலீபின் முன்னாள் நண்பரும் இயக்குநருமான பாலசந்திர குமார் போலீஸ் புகார் அளித்தார். இதற்கிடையில் மஞ்சு வாரியரை மோசமானவராகச் சித்தரிக்க வழக்கறிஞர் ராமன் பிள்ளை திலீபின் தம்பு அனூபுக்குப் போய் சாட்சியம் சொல்லிக் கொடுக்கும் ஆடியோ பதிவு வெளியாகி சர்ச்சை ஆனது. இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இருவர் பதவி விலகிவிட்டனர். இப்போது வழக்கு சூடு பிடித்திருக்கும் இதன் விசாரணை அதிகாரி திடீரென மாற்றப்பட்டார். இதற்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜனநீதி என்னும் அமைப்பு விசாரணை நீதிபதி இந்த வழக்கில் சரியாகச் செயல்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நடிகை நீதிபதி ஹனி வர்கீஸ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். இப்போது அவரை விரைவில் மாற்ற வேண்டும் என ஜனநீதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. அதன் பிரநிதிகளில் ஒருவரான பத்மநாபன், “இந்த வழக்குடன் கேரளத்தில் - உயர் நீதிமன்ற உள்பட - நீதிமன்றங்களின் மீது அவநம்பிக்கை வருவதற்கான சூழல் உருவாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE