சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அவரது ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'டான்'. இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, முனீஷ்காந்த், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், சூரி இருவரும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கும் இப்படம் வரும் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அத்துடன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
» ஜாமினை மறுத்த சனல் குமார் சசிதரன்
» “நல்வாழ்த்துகளுக்கு முன்பே நன்றி” - மகளின் திருமண தருணப் பகிர்வில் ரஹ்மான் நெகிழ்ச்சி
இந்த ட்ரெய்லரை பொறுத்தவரை, சிவகார்த்திகேயனின் பள்ளி மற்றும் கல்லூரி கால வாழ்க்கையை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சரியான இலக்கை தீர்மானிக்க முடியாத சராசரி இளைஞனின் கல்லூரி வாழ்க்கையும், அதில் அவன் எதிர்கொள்ளும் சவால்களும், வாழ்க்கை குறித்த புரிதல்களும், காதல், காமெடியுடன் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ட்ரெய்லரை வைத்துப்பார்த்தால் சமுத்திரகனி, சிவகார்த்திகேயனின் தந்தையாகவும், எஸ்.ஜே.சூர்யா கல்லூரி பேராசியராகவும், ராதாரவி கல்லூரி முதல்வர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதை உணர முடிகிறது. 'எனக்குள்ள என்ன திறமை இருக்குன்னு கண்டுபிடிச்சு வாழ்க்கைல பெரிய ஆள் ஆகணும்' இந்த ஒற்றை வசனமே படத்தின் ஒன்லைன் என ஒட்டுமொத்த ட்ரெய்லரும் உணர்த்துகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago