சமந்தாவின் பிறந்தநாளையொட்டி படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
சமந்தா தனது 35 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்த பிறந்தநாளில் நடிகை சமந்தா தனது அடுத்த தெலுங்கு படத்திற்காக ஸ்ரீநகரில் இருந்தார். இப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக பிரபல ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். சமந்தாவின் பிறந்தநாளில் அவருக்கு படக்குழுவினரும், விஜய் தேவரகொண்டாவும் சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டனர். இதற்காகப் படத்தின் காட்சி படமாக்குவதுபோல் போலியாக காட்சியை எடுக்க திட்டமிட்டனர். இதனைத் தொடர்ந்து சமந்தாவை அழைத்து வசனங்களை அளித்து பேச வைப்பர். அக்காட்சியை உண்மையான படத்தின் காட்சி என்று நம்பி சமந்தா விஜய் தேவரகொண்டாவைப் பார்த்து காதல் வசனங்களை பேசிக் கொண்டிருப்பார். அப்போது விஜய் தேவர்கொண்டா சமந்தா என்று கூப்பிடுவார்.. உடனே என்ன இது என் பெயரை கூப்பிடுகிறீர்கள் என்று சமந்தா சிரிக்க, விஜய் தேவரகொண்டா சிரித்துக் கொண்டே சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவார். ஒட்டுமொத்த படக்குழுவும் சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவர்..பின்னர் படக்குழுவுடன் சமந்தா கேக் வெட்டி தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.
இந்த வீடியோவை விஜய் தேவரகொண்டா தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago