உலகம் முழுவதும் ரூ.800 கோடி... இந்தியில் மட்டும் ரூ.300கோடி - 'கேஜிஎஃப் 2' வசூல் சாதனை!

By செய்திப்பிரிவு

'கேஜிஎஃப் 2' திரைப்படம் உலகம் முழுவதும் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை குவித்துக் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அதிக வசூலை குவித்த 7-வது இந்திய திரைப்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றிருக்கிறது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான 'கேஜிஎஃப்2' திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. கடந்த 14-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் எதிரொலியாக உலக அளவில் இந்தப் படம் இதுவரை 818.73 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. உலகளவில் ரூ.800 கோடி வசூலித்த ரஜினியின் '2.0' படத்தின் வசூல் சாதனையை முறியடித்து, உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய 7-வது இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது 'கேஜிஎஃப்2'.

இந்தப் படத்தின் இந்தி பதிப்பை எடுத்துக்கொண்டால், இதுவரை 321.12 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. கடந்த 22-ம் தேதி இந்தியில் வெளியான ஷாயித் கபூரின் 'ஜெர்சி' திரைப்படத்தால் 'கேஜிஎஃப் 2' படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என கருதப்பட்ட நிலையில், அப்படி எதும் நிகழவில்லை. 'ஜெர்சி' படத்தை பொறுத்தவரை இதுவரை 14 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. 'கேஜிஎஃப் 2' இந்தி பதிப்பு ஞாயிற்றுக்கிழமை ரூ.22.68 கோடி வருவாயுடன் 'ஜெர்ஸி' படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது. படம் வெளியான 10 நாட்களில் இந்தியில் 300 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. விரைவில் படம் உலகம் முழுக்க ரூ.1000 கோடியை வசூலை நெருங்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE