மீண்டும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்.
ஆஸ்கர் விருது விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த சர்ச்சையில் சிக்கியிருந்தார் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் குறித்து உருவக் கேலியாக பேசினார். முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் அலோபீசியா என்ற நோய் தோற்றால் பிங்கெட் போராடி வருவதை கேலி பேசியதால் அவரை தாக்கினார் வில் ஸ்மித்.
இந்த விவகாரத்தில் நடிகர் வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட, சர்ச்சை முடிவுக்கு வந்தது. தொடர்ந்து வில் ஸ்மித் இந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்கவும் செய்தார்.
இதனிடையே, வில் ஸ்மித் தற்போது இந்தியா வந்துள்ளார். மும்பை வந்த அவர், அங்கு உலா வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நேற்று காலை மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய வில் ஸ்மித், நவி மும்பை பகுதியில் உள்ள இஸ்கான் கோவில் ஒன்றில் பூஜைகளில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை இஸ்கான் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொள்ளும் வில் ஸ்மித், அதன்பின் ஆன்மிக தியானத்திலும் ஈடுபடவுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர், இந்தியா வருவது இது முதல் முறை கிடையாது. 2019ல் இதேபோல் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி ஒன்றிற்காக இந்தியா வந்திருந்தவர், அப்போது ஹரித்துவார் சென்று வழிபட்ட நிகழ்வும் நடந்தன.
முக்கிய செய்திகள்
சினிமா
34 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago