நடிகர் தனுஷை இயக்கும் நெல்சன் திலீப்குமார்? 

By செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்துடன், 'தலைவர்169' படத்துக்குப்பிறகு, தனுஷுடன் இயக்குநர் நெல்சன் தீலிப்குமார் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் நெல்சன் திலீப்குமார். தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து, 'டாக்டர்' படத்தை இயக்கினார். 3-வது படத்திலேயே நடிகர் விஜய்யுடன் இணைந்தவர், 'பீஸ்ட்' படத்தை இயக்கினார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து 'தலைவர்169' படத்தை இயக்க இருக்கிறார் நெல்சன். இந்நிலையில், இந்தப் படத்தை அடுத்து தனுஷுடன் நெல்சன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷை பொறுத்தவரை, அவர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும், செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படம் இறுதிக்கட்ட பணியில் உள்ளது. இதற்கு அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படங்களுக்குப் பிறகு தான் நெல்சன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்